| Management number | 237269739 | Release Date | 2026/07/10 | List Price | $90.00 | Model Number | 237269739 | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| Category | |||||||||
முயற்சி நம்முடையது; முடிவு இறையறள்படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச் ஜோதிடம் ஏற்புடையதாகும். ஆரூடம் என்பது ஒரு முன்னேறிவிப்பாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம். எனவே இந்த முறைக்கு பெயர்தான் ஆருட ஜோதிடம் என்பதாகும் “ முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதை நடைமுறையில் ஏற்று கொள்ளதான் வேண்டும் என்றாலும், “அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா” என்பதும் அனுபவ உண்மையாகவே காணப் பெறுகிறது. எந்த ஒரு செயலையும் முன்கூட்டி அறிவதால் ஏற்றவாறு முயன்று வெற்றி காண முடியும். இந்த நம்பிக்கை உடையவர்க்கு இந்த ஆருட சோதிடம் முழுமையாக வழிகாட்டும். இந்த புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி ? கேள்வியை தேந்தெடுங்கள் : நூலின் தொடக்கத்தில் 108 கேள்வியைத் தேர்ந்தெடுங்கள். இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் 108 கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் நீங்கள் அறிய விரும்பும் செய்திக்கு ஏற்ற ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுங்கள். சான்றாக, நீங்கள் ஒருவரை மிகவும் விரும்புகிறீர்கள். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் நினைக்கிறீர்கள். ( அது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்) நாம் நினைப்பவரைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா ? இது உங்கள் உள்ளத்தில் எழும் கேள்வி. இந்த நூலில் உள்ள கேள்வியைப் படியுங்கள். 56 ஆம் எண்ணில் உங்கள் கேள்வி இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் வழிபடும் இறைவனை உள்ளத்தில் நினைத்து மூன்று எண்களை எழுதுங்கள். அந்த எண்கள் எந்த அளவை உடையனவாகவும் இருக்கலாம். இந்த எண் முதல் இந்த எண்ணுக்குள் இருத்தல் வேண்டும். என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த மூன்று எண்களை கூட்டவும். கூட்டி வந்த தொகையை எட்டால் பங்கிடுங்கள். ( எட்டால் வகுத்தல் ) மீதி என்ன எண் வருகிறதோ அதுவே உங்களுக்கு விடை கூறும் எண்ணாகும். அவ்வாறு மீதி வந்த எண்ணைக் கேள்வி எண்ணோடு கூட்டுங்கள். கூட்டும் போது கேள்வி எண்ணையே முதல் எண்ணாகக் கொண்டு கூட்டுவது மிக மிக முக்கியம். இவ்வாறு கூட்டி வந்த எண்ணே உங்கள் கேள்விக்கு விடை கூறும் பக்க எண் ஆகும். நூலில் அந்த எண் உள்ள பக்கத்தை புரட்டுங்கள். அந்தப் பக்கத்தில் எட்டால் வகுத்து மீதி வந்த எண்ணில் கொடுக்கப் பெற்றுள்ள செய்தியே உங்கள் கேள்விக்கான முன்னறிவிப்பு விடையாகும். மீதி ஒன்றும் இல்லை. 0 வந்தது என்றால் அதை 8 எட்டு வைத்துக் கொண்டு பாருங்கள். 1. விநாயகர் பிரதிஷ்டை செய்யலாமா ? 2. இந்த வாகனத்தை வாங்கலாமா ? 3. இந்தக் கோயில் கட்டலாமா ? 4. இந்தத் தெருவை அமைக்கலாமா ? 5. இந்தத் தோட்டம் வைப்பதால் பயன் உண்டா ? 6. சிவலிங்கப் பிரதிஷ்டை, பூசை ஏற்றதா ? 7. இவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமா ? 8. வியாபாரம் பலன் தருமா ? 9. களவு போன பொருள் திரும்பக் கிடைக்குமா ? 10. சிறைக்குப் போனவர் விடுதலை பெறுவாரா ? 11. இந்த நாட்டுக்குப் போகலாமா ? 12. இந்தப் பெண்ணால் மாமியார் வீடு நலம் பெறுமா ? 13. இவர்களிடையே உள்ள வெறுப்பு மாறுமா ? 14. வேளாண்மை பலன் தருமா ? 15. இந்தக் குதிரையை / வாகனத்தை வாங்கலாமா ? 16. இந்த வீட்டை வாங்குவது நல்லதா ? 17. இவரைக் காணச் செல்வது நல்லதா ? 18. இந்த இடம் இவனுக்கு நிலையானதா ? 19. இந்த மாட்டை வாங்கலாமா ? 20. இவருக்குப் பிறக்க போவது ஆணா பெண்ணா ? 21. ஊருக்குப் போனவர் நலமாக வருவாரா ? 22. இந்த வீட்டைப் பிரித்துக் கட்டலாமா ? 23. இந்த மருந்து சாப்பிட நோய் குணமாகுமா ? 24. இந்தப் பிள்ளையைப் பள்ளியில்ல சேர்க்கலாமா ? 25. என் உள்ளத்தில் நினைப்பவர் நல்லவரா ? 26. அலுவலர் கோபிப்பாரா ? 27. நினைத்த செல்வம் கிடைக்குமா ? 28. இவன் செல்வந்தன் ஆவானா ? 29. இந்த தேர்வுக்குப் போகலாமா ? 30. தேர்வில் வெற்றி கிடைக்குமா ? 31. கிடைத்த செய்தி உண்மையானதா ? 32. தேர்தலில் வெற்றி கிடைக்குமா ? 33. இவரைக் காண்பது நல்லதா ? 34. வெளிநாட்டுப் பயணம் உண்டா ? 35. இந்த நோய் குணமாகுமா ? 36. இந்தத் தொழிலால் லாபம் ஏற்படுமா ? 37. வேறு இடத்துக்குக் குடிபோவது நல்லதா ? 38. நினைத்த காரியம் நல்லதா ? 39. இதன் விலை ஏறுமா குறையுமா ? 40. பழைய தொழில் மீண்டும் கிடைக்குமா ? 41. இந்தத் துணிவான காரியத்தில் ஈடுபடலாமா ? 42. ஏரி கட்டலாமா ? 43. இந்த முயற்சியில் வெற்றி கிடைக்குமா ? 44. இதற்காக முயற்சி செய்வது நல்லதா ? 45. இந்தக் கலியாணம் செய்யலாமா ? 46. இந்தத் திருட்டை கண்டுபிடிக்க முடியுமா ? மற்றும்... Read more
| ASIN | B078HSNKXJ |
|---|---|
| Language | Tamil |
| File size | 1.5 MB |
| Page Flip | Enabled |
| Word Wise | Not Enabled |
| Reading age | 10 - 18 years |
| Print length | 132 pages |
| Accessibility | Learn more |
| Screen Reader | Supported |
| Publication date | December 19, 2017 |
| Enhanced typesetting | Enabled |
If you notice any omissions or errors in the product information on this page, please use the correction request form below.
Correction Request Form